இனிமே எனக்கு செட் ஆகாது.? 40 வயதில் முடிவெடுத்த தனுஷ்.! அதிர்ச்சியில் திரையுலகம்

actor dhanush
actor dhanush

Dhanush : தமிழ் சினிமாவில் இன்று பிரபலமான நடிகராக வருபவர் தனுஷ். ஆரம்பத்தில் காதல் சமந்தப்பட்ட படங்களில் நடித்து வளர்ந்தார். இந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியை காதல் திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் லிங்கா மற்றும்

யாத்ரா என இரு மகன்கள் இருகின்றனர். அதன் பிறகு சினிமா, வாழ்க்கை என இரண்டிலும் அழகாக ஓடிக்கொண்டிருந்த தனுஷுக்கு திடீரென பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பித்தது இதனால் ஐஸ்வர்யா தனுஷை விட்டு பிரிந்து உள்ளனர் இவர்களை சேர்த்து வைக்க ரஜினி குடும்பமும், தனுஷ் குடும்பமும் எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதனால் தற்பொழுது வரை

இருவரும்  தனித்தனியாக தனது டிராக்கில் ஓடிக் கொண்டிருக்கின்றனர் அப்படி தனுஷ் வாத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது கேப்டன் மில்லர் மற்றும் தனுஷ் 50 ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த இரண்டு படத்திற்கான எதிர்பார்ப்புமே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

தற்போது 40 வயதை தாண்டி பிஸியான நடிகராக ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தற்போது ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். தனக்கும் 40 வயது ஆகிறது. இனிமேல் காதல் படங்கள் தனக்கு செட் ஆகாது. அதனால் வித்தியாசமான படங்களில் நடிக்க இருப்பாராக முடிவெடுத்து உள்ளாராம்.

குறிப்பாக அவர் ஆக்சன், திரில்லர் மற்றும் சமூகத்திற்கு தேவையான கருத்துக்கள் உள்ள படங்களில் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்த முடிவை அஜித் ஏற்கனவே எடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.