தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி அதன் பிறகு ஹீரோவாக பல திரைப்படங்களை கொடுத்த சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கபடுபவர்தான் நடிகர் சரத்குமார் இவர் சமீபத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் பல்வேறு திரைப்படங்களில் வெற்றி கொடுத்துள்ளார்.
பொதுவாக அந்த காலத்தில் வெளியான திரைப்படங்களில் இரட்டை கதாபாத்திரம் உள்ள திரைப்படம் என்றால் அது சரத்குமார் திரைப்படம் ஆகத்தான் இருக்கும் ஏனெனில் இளம் வயது முதல் முதிய வயது வரை எந்த ஒரு கெட்டப் போட்டாலும் நமது சரத்குமாருக்கு அட்டகாசமாக பொருந்தும்.
அந்தவகையில் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றிதான். ஒரு நேரத்தில் குடும்ப திரைப்படங்களாக நடித்து மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த நமது நடிகர் தற்போது கலெக்டர் போலீஸ் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து காட்டி உள்ளார்.
ஆசை யாரைத்தான் விட்டது அந்தவகையில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் வைத்து இயக்குனர்களும் திரைப்படம் இயக்க போட்டி போட்டு வந்தார்கள் அந்த இயக்குனர்களில் நமது இயக்குனர் சேரனும் ஒருவர் இவ்வாறு சேரன் இயக்க இருந்த இத்திரைப்படத்தை சித்ரா லட்சுமணன் அவர்கள் தயாரிக்க முன்வந்துள்ளார்.
ஆனால் சரத்குமார் இதுவரை நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தாராம். அந்த வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு திரைப்படத்தை இயக்க திட்டம் போட்டு இருந்தார்கள். சில காரணத்தின் மூலமாக இத்திரைப்படத்தில் சரத்குமார் நடிக்க முடியாமல் போய்விட்டது.
பின்னர் இத்திரைப்படத்தை கடைசி வரை இயக்க முடியவில்லை என சேரனும் தயாரிக்க முடியவில்லை என சித்ராலட்சுமணன் அவர்களும் வருத்தத்தில் உள்ளார்கள். இவ்வாறு வெளிவந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.