தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களில் ஒருவர் சிம்பு இவர் நடிகராக மட்டும் சினிமா உலகில் பயணிக்காமல் இயக்குனராகவும், பாடகராகவும் பயணிக்கிறார். இதனால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக நடிகர் சிம்பு இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாநாடு திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பல்வேறு புதிய படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அந்த வகையில் கௌதம் மேனன் உடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வெகு விரைவிலேயே வெளிவர ரெடியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து கௌதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர், டி ஜே அருணாச்சலம், கலையரசன் உட்பட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சிம்பு வேற மாதிரி நடித்துள்ளார் மாஸ் சீன்கள் இந்த படத்தில் அதிகம் இருக்கும் என தெரிய வருகிறது இந்த படத்தை ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் படபிடிப்பு தளத்தில் ஒரு காட்சியில் நடிகர் சிம்பு காரில் இருந்து இறங்கி சட்டையை கழட்டி விட்டு விமானத்தில் ஏறுவது போல இருந்ததாம் இந்த காட்சியை இயக்குனர் கிருஷ்ணா சிம்புவிடம் சொல்லி உள்ளார் சிம்பு தனக்கு ஒரு மாதம் டைம் கொடுங்க ஜிம் சென்று உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு படத்தில் நடிக்கிறேன் என கூறிவிட்டார்.
ஒரு மாதம் டைம் சொன்ன உடனேயே படகுழு அதிர்ந்து விட்டது உடனே படகுழு சார் அதெல்லாம் தேவையில்லை காரில் இருந்து இறங்கி சும்மா நடந்து போங்கள். நாங்கள் மாஸாக எடுத்துக் கொள்கிறோம் என கூறி உள்ளனர் அது எல்லாம் முடியாது என மறுப்பு தெரிவித்துவிட்டு படப்பிடிப்பு தளத்திலிருந்து கிளம்பி சென்னை வந்து விட்டாராம் சிம்பு. இதனால் படக்குழு செம்ம அப்செட்டில் இருக்கிறதாம்.