சினிமாவிற்கு வருகின்ற நடிகர்கள் பலரும் முதல் படத்தை ஹிட் படமாக கொடுத்துவிட்டால் தனக்கான வரவேற்பு சினிமா உலகில் கிடைத்து விட்டதாக என கணக்கு போடுவது வழக்கம்
ஆனால் வெள்ளித்திரையில் ஹிட் படங்களை தொடர் கொடுக்காவிட்டாலும் மூன்று அல்லது நான்கு படங்களுக்கு ஒரு படத்தையாவது ஹிட் கொடுத்தால் மட்டுமே சினிமா உலகம் திரும்பிப் பார்க்கும் அப்படி இல்லையென்றால் பட வாய்ப்பு கூட கிடைக்காது.
அந்த வகையில் வாரிசு நடிகர்கள் தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் ஹிட் படங்களை கொடுத்து அதன்பின் சினிமாவில் பட வாய்ப்புகளே இல்லாமல் தவித்து வருகின்றனர்.
அந்த வகையில் டாப் 3 இடத்தை பிடித்துள்ள நடிகர்களில் யார் என்பதை பார்ப்போம்.
1 முதலாவதாக நடிகர் ரவிகிருஷ்ணா செல்வராகவன் இயக்கத்தில் வெளியான என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமானார்.
முதல் திரைப்படமே அவருக்கு அமோக வெற்றியை பெற்று தந்தது.
அதன் பின் இவருக்கு பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து கிடந்தன இருப்பினும் அந்த திரைப்படங்கள் மாபெரும் தோல்வியை தழுவியதால் தற்போது சினிமாவில் இருந்து ஓரம்கட்ட பட்டுள்ளார்.
ஆனால் இவரது பெயர் அடிபட்டால் தான் ஞாபகத்திற்கு வருவது செவன் ஜி ரெயின்போ காலனி படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
2. இரண்டாவது இடத்தில் இருப்பது நடிகர் ஜித்தன் ரமேஷ் இவரது அப்பா பல ஹிட் படங்களை தயாரிக்கும் ஆர்பி சவுத்ரி. இவரது மூத்த மகன் ஆவார்.
இவர் அவ்வப்போது சினிமாக்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும் ஜீத்தன் படத்தை தவிர வேறு எந்த ஒரு திரைப்படமும் ஹிட் படமாக அமையவில்லை. ஆனால் இவரது தம்பி ஜீவா தமிழ் சினிமாவில் தற்போது ஓரளவு வெற்றியை கொடுத்து தமிழ் சினிமாவில் தலைகாட்டி வருகிறார்.
மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளவர் விக்ரம் பிரபு இவரது தாத்தா, இவரது அப்பா தமிழ் சினிமாவில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்தனர்
ஆனால் இவர் கும்கி என்ற ஹிட் படத்தை மட்டுமே கொடுக்க முடிந்தது அதன் பின் இவர் நடித்த ஒவ்வொன்றும் சுமாரான வெற்றி பெற்றாலும் தற்போது அவரையும் சினிமாவில் நிலைத்து நிற்க போராடி வருகிறார்.