எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும்.. அந்த மாதிரி நடிக்கவே மாட்டேன் – ஒத்த காலில் நிற்கும் சிம்பு.!

simbu-
simbu-

நடிகர் சிம்பு தமிழ் சினிமா உலகில் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கி வருகிறார். அதனால் சிம்புவின் மார்க்கெட் நாளுக்கு நாள் எகிரி  கொண்டே இருக்கிறது. இவர் நடிகராக மட்டும் பயணிக்காமல் பாடகராகவும்,  நடன கலைஞராகவும், இயக்குனராகவும் நடிகராகவும் தன்னை வளர்த்துக் கொண்டு ஓடுகிறார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் ஒரு நடிகராக தான் அவர் நடிக்க ரொம்ப விரும்புகிறார் இவர் கடைசியாக நடித்த மாநாடு திரைப்படம் 100 கோடி வசூல் செய்தது அதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல படத்தில் நடித்து வருகிறார் இந்த படங்கள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன.

சிம்பு படங்களையும் தாண்டி பல்வேறு விளம்பரங்களிலும் நடித்து வருகிறார் இதனால் சிம்புவுக்கு நாளா பக்கமும் காசு கூடிக் கொண்டு  இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் சிம்புவை தேடி மிகப்பெரிய ஒரு ஆபர் வந்துள்ளது ஆனால் அதை வேண்டாம் என மறுத்துள்ளார். ஒரு ஆல்கஹால் பிராண்ட் விளம்பரத்தில் நடிக்க சிம்புவை தேடி சென்று உள்ளது.

ஆனால் சிம்புவோ நீங்கள் எவ்வளவுதான் காசு கொடுத்தாலும் இது போன்றவற்றில் நடிக்க மாட்டேன் என ஓப்பனாக பேசி விட்டாராம். ஏனென்றால் பாலிவுட்டில் பிரபல நடிகர் ஒருவர் பல மதுபான விளம்பரங்களில் நடித்து சர்ச்சையில் சிக்கினார் தற்பொழுது நாமும் நடித்தால் நமக்கும் தலைவலி வந்துவிடும் எனக்கூறி சிம்பு இதிலிருந்து கழண்டு விட்டாராம்.

கோடிக்கணக்கில் பணம் இந்த விளம்பரத்திற்காக சிம்புவுக்கு கொடுக்க ரெடியாக இருந்தும் சிம்பு காசு முக்கியமல்ல ஏற்கனவே டேமேஜ் ஆகியிருக்கும் பெயரை இன்னும் டேமேஜ் படுத்த விரும்பவில்லை தனக்கு ரசிகர்கள் போதுமே என கருதி விட்டுவிட்டாராம். இதனை அறிந்த ரசிகர்கள் தற்பொழுது சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.