தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் தோல்வியை சந்திக்காத இயக்குனர்கள்.! அட லிஸ்ட்ல இவரும் இருக்காரு.?

directors
directors

தமிழ் சினிமாவில் தோல்வியை கொடுக்காத நடிகர்கள் மத்தியில் தற்போது தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் தோல்வியை கொடுக்காத இயக்குனர்களின் படங்களையும் அவர்கள் யார் யார் என்று தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

வெற்றிமாறன் :- இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் தனுசை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார் அதேபோல் விசாரணை என்ற திரைப்படத்தையும் இயக்கி உள்ளார் இவர் இயக்கிய அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் செம ஹிட் அடித்தது. அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார் இந்த படத்தின் பயிற்சி சூட்டிங் நடந்து முடிந்துவிட்டது அடுத்ததாக இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்லி :- ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் இவர் என்னதான் காப்பி அடித்து இயக்கியிருந்தாலும் அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு நடிகரான ஷாருக்கான் வைத்து  ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்து விட்டது. மேலும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இணைந்துள்ளனர்.

எஸ் ஜே சூர்யா :- நடிகர் வில்லன் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து வரும் எஸ் ஜே சூர்யாவின் ஆரம்ப கட்டத்தில் ஒரு இயக்குனராக தான் பணிபுரிந்தார் அவர் இயக்கிய குஷி, வாலி, இசை, நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டு உள்ளார் இந்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இயக்குவதை விட்டுவிட்டு நடிகராக நடித்துக் கொண்டு வருகிறார்.

சிறுத்தை சிவா:- சிறுத்தை என்ற வெற்றி திரைப்படத்திற்கு பிறகு வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் வரை அனைத்து படங்களுமே ஹிட் படமாக தான் அமைந்துள்ளது அதன் பின்னர் ரஜினியை வைத்து அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும் சுமாரான அளவில் வெற்றி பெற்றது.

லோகேஷ் கனகராஜ் :- மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதனைத் தொடர்ந்து அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தை இயக்க உள்ளார் இந்த இந்த திரைப்படத்திலிருந்து அவ்வபோது அப்டேட்டுகளையும் வெளியிட்டு வருகிறார்.

ஹெச் வினோத் :- சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர்தான் இயக்குனர் எச் வினோத்.