சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விக்ரம் இந்த திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியிருந்தார் இவ்வாறு பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படமானது ஜூன் 3ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தந்துள்ளது.
மேலும் இந்த திரைப்படமானது வெளியாகி சுமார் மூன்று நாட்கள் ஆன நிலையில் தற்போதைய வசூல் நிலவரம் 150 கோடிக்கு மேல் ஆனது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி பகத் பாசில் மற்றும் சூர்யா ஆகிய அனைவருடைய கதாபாத்திரமும் மிகச் சிறப்புமிக்க அமைந்தது.
மேலும் கடைசியாக சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தது இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் உருவாகும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்தன மேலும் லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
ஆனால் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முன்பாகவே இயக்க இருந்ததாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய திரைப்படமாக இருப்பதன் காரணமாக எனக்கு கூடுதல் நாட்கள் வேண்டும் என்பதன் காரணமாக இந்த திரைப்படம் தாமதம் ஆகியிருந்தது
இந்நிலையில் இரும்புக்கை திரைப்படம் உருவாக போகிறது என சந்தோஷமாக இருந்த ரசிகர்களுக்கு லோகேஷ் ஏமாற்றத்தை கொடுத்துவிட்டார் அதாவது சூர்யாவை வைத்து விக்ரம் மூன்றாம் பாகம் அல்லது இரும்பு கை திரைப்படத்தை இயக்க போவது கிடையாதாம் புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் லோகேஷ் நமக்கு அல்வா கொடுத்து விட்டார் என ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.