வெற்றிமாறனுக்கும் – தனுஷ்கும் இடையே இருப்பது நட்பு இல்ல..! முதல் முறையாக ரகசியத்தை உடைக்கும் பிரபல நடிகர்.!

dhnaush and vetrimaran

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் தனுஷை வைத்து பொல்லாதவன் என்னும் திரைப்படத்தை கொடுத்து அறிமுகமானார். முதல் படமே காதல் ஆக்ஷன் சென்டிமென்ட் போன்ற அனைத்தும் நிறைந்திருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவருக்குமே அவர்களது கேரியரில் திருப்புமுனை படமாக அமைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் உடன் கூட்டணி அமைத்து ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக வெற்றிமாறனின் ஆடுகளம் படம் மட்டும் பல விருதுகளை தட்டிச் சென்றது. இந்த நிலையில் வெற்றிமாறன் தொடர்ந்து தனுஷ் உடன் இணைந்து படங்களை கொடுத்து வந்தாலும்..

அந்த படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. மற்ற இயக்குனர்களை காட்டிலும் வெற்றிமாறனின் படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக அமையும். சில இயக்குனர்கள் ரசிகர்களை கவரும்படியான படங்களை கொடுத்து நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். ஆனால் இயக்குனர் வெற்றிமாறனோ மக்களுக்கு தேவையான நல்ல கருத்துள்ள படங்களை கொடுத்து வருகிறார்.

அந்த படங்கள் ஒவ்வொன்றும் தேசிய விருது பெரும் அளவிற்கு வெற்றி அடைகின்றன. இந்த நிலையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக இரண்டு காளைகளை வாங்கி சூரியா அவரது வீட்டில் வளர்த்து வருவதாக கூட அண்மையில் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.

surya
surya

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சூர்யா வெற்றிமாறன் குறித்து ஒரு சுவாரஸ் தகவல் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அவர் கூறியது வெற்றிமாறன் எந்த கதையை எழுதினாலும் அதில் தனுஷை வைத்து யோசித்து தான் எழுதுவார். அப்படி என்னிடம் சில கதைகளை அவர் கூறிய போதும் நான் உணர்ந்தேன். இயக்குனர் வெற்றிமாறன் அந்த அளவுக்கு தனுஷை காதலிக்கிறார் என பேசியுள்ளார்.