தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு இவர் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி மாபெரும் ஹிட்டு கொடுத்துள்ளது அந்த வகையில் அந்த காலகட்டம் முதல் இந்த காலகட்டம் வரை மீம்ஸ் கிரியேட்டர்ஸ் களுக்கு உதவியாக இருப்பது வடிவேலுவின் காமெடி தான்.
இவ்வாறு தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருந்த நடிகர் வடிவேலு பின்னர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்ததிலிருந்து பல்வேறு பிரச்சனையை சந்திக்க நேரிட்டது அதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் ஏற்பட்ட பிரச்சனை இன்றுவரை அவரை துரத்திக் கொண்டே இருக்கிறது.
வடிவேலுக்கு ரெட் கார் கொடுத்து அவரை சினிமாவில் நடிக்க முடியாமல் செய்தது மட்டும் இல்லாமல் தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிவடைந்த நிலையில் வடிவேலு மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் வடிவேலு அவர்கள் இரண்டு திரைப்படங்களில் பிஸியாக இருப்பது மட்டுமில்லாமல் தற்போது சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இவ்வாறு இந்த திரைப்படத்தில் நாய்களுடன் நடிகர் வடிவேலு செம கெத்தாக அமர்ந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வந்தன.
மேலும் இந்த திரைப்படத்தில் டாக்டர் பட காமெடி நடிகர் ரெடிங் கிங்ஸ்லி மற்றும் சிவாங்கி போன்ற பல பிரபலங்கள் நடிப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ஒரு பாடலுக்கு குரல் கொடுத்தது மட்டுமில்லாமல் அந்த பாடலுக்கு பிரபு தேவா அவர்கள் தான் நடனம் அளிக்க உள்ளாராம்.
மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் உதயநிதி கதாநாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிப்பது மட்டுமில்லாமல் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை அவர்கள் வில்லனாக களம் இறங்க உள்ளார்.
ஆனால் இந்த திரைப்படத்தில் வடிவேலு எப்படிப்பட்ட கதாபாத்திரம் இருக்கும் என பலரும் யோசித்த நிலையில் அதற்கான பதில் கிடைத்துள்ளது அதாவது இந்த திரைப் படத்தில் உதயநிதிக்கு தந்தையாக வடிவேலு நடித்துள்ளாராம்.