அண்ணாத்த ஆடியோ லாஞ்ச்க்கு சான்ஸே இல்லை..! வெளிவந்த காரணத்தால் காண்டான ரசிகர்கள்..!

annaththa-2

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் சமீபத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்தை பிரபல சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தினை வருகின்ற தீபாவளியை முன்னிட்டு திரையில் வெளியிடலாம் என படக்குழுவினர்கள் திட்டமிட்டிருந்தார்கள் அந்த வகையில் ரசிகர்களும் பிரபலங்களும் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு அதனை கொண்டாடி வந்தார்கள்.

அந்த வகையில் வெளிவந்த அண்ணாத்த நாதான் என்ற பாடல் அனைத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது இந்நிலையில் சார காற்று என்ற பாடல் ஒன்று இணையத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். பொதுவாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய திரைப்படத்தின் பாடலை  எப்பொழுதும் ஆடியோ லாஞ்ச் மூலமாகத்தான் வெளியிடுவார்கள்.

ஆனால் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்  அண்ணாத்த திரைப்படத்தில்  உள்ள பாடல்கள் அனைத்தும் இணையத்தில் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டே இருக்கிறது.  இதனை தொடர்ந்து பார்த்தாள் ஆடியோ லாஞ்ச் நடைபெறுவதற்கு சான்சே இல்லை என தெரிகிறது.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தற்போது ஊரடங்கு காரணமாக ரசிகர்கள் பலரையும் இந்த ஆடியோ லாஞ்ச் அனுமதிக்க முடியாது ஆகையால் குறைவான ரசிகர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் இந்நிலையில் பிரம்மாண்டமான ஒரு திரைப்படத்தின் ஆடியோ லான்ச் குறைவான ரசிகர்கள் மத்தியில் நடப்பதா.

ஆகையால் தான் இந்த திரைப்படத்தின் பாடல் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள் வருகின்ற தீபாவளி  நெருங்குவதற்கு முன்பாக இந்த திரைப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் ஆடியோ லாஞ்ச் நடத்த வேண்டுமென ஆவலுடன் இருக்கிறார்கள்.

annaththa-1
annaththa-1