தற்பொழுது இயக்குனர் மகளாக சமீபத்தில் அறிமுகமாகி சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் அதிதி சங்கர் தற்பொழுது வெளியாகி உள்ள தகவலின் படி அதிதி சங்கரை விட நிவேத்யா சங்கர் சோசியல் மீடியாவில் எக்கச்சக்கமான பாலோசர்களை வைத்துள்ளார் என்ற தகவல் வைரலாகி வருகிறது.
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கார்த்திக் தற்பொழுது முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படத்தில் முதன்முறையாக கதாநாயகியாக அதிதி சங்கர் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார். இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவர் தமிழ் சினிமாவிற்கு இப்பொழுதுதான் அறிமுகமானாலும் இதற்கு முன்பே தெலுங்கில் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதை கவர்ந்துள்ளார் மேலும் தற்பொழுது இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமும் இருந்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் அதிதி சங்கரை விட சோசியல் மீடியாவில் நிவேதியா ஷங்கர்ரை ரசிகர் அதிகமாக பாலோ செய்து குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது தற்பொழுதுள்ள அனைத்து 2k கிட்ஸ்களும் தொடர்ந்து டிக் டாக் செய்வதன் மூலம் இன்ஸ்டாகிராம், ட்டுவிட்டர் போன்ற சோசியல் மீடியாக்களில் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்து வருகிறார்கள். சோசியல் மீடியாவின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நிவேதியா சங்கர் இவர் இன்ஸ்டாகிராமில் முக்கியமாக இருந்து வரும் நட்சத்திரங்களில் இவரும் ஒருவர் இவர் கேரளாவில் பிறந்தவர் இவருடைய தந்தை சங்கர் தாயார் ரெம்யா சங்கர் ஆவார் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருக்கு சோசியல் மீடியாவில் ஆர்வம் இருந்ததால் தொடர்ந்து தன்னுடைய டிக் டாக் வீடியோக்கள் மற்றும் நடனம் ஆடுவது, புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிட்டு தனக்கென எக்கச்சக்கமான ரசிகர்களை உருவாக்கினார்.
தொடர்ந்து இவர் சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வரும் நிலையில் அவருடைய பெற்றோர்களும் அவர் ஆதரவாக இருந்து வருகிறார்கள் என பேட்டியில் கூறியிருந்தார் மேலும் இவருக்கு சிறு வயதிலிருந்து நடனம் மற்றும் நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டவராம் எனவே தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி வந்தார் ஆனால் இவருக்கு பெரிதளவில் வரவேற்பு கிடைக்கவில்லை தடை செய்யப்பட்ட பிறகு இவரின் இன்ஸ்டாகிராமுக்கு தாவிவிட்டார் .
2019ஆம் ஆண்டு முதன்முறையாக இவர் வீடியோ பதிவிட்டு இருந்தார் தற்பொழுது இவர் இன்ஸ்டாகிராமில் இவரை 2.7 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள் இவரை தொடர்ந்து முன்னணி இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கரை விட நிவேத்யா சங்கரை இன்ஸ்டாகிராமில் அதிகமான ரசிகர்களை வைத்துள்ளார் அதிதி சங்கர் 312k ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் ஆனால் அவரை விட ஒன்பது மடங்கு நிவேத்யா அதிகமான ரசிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.