ஒரு சில நடிகைகள் தங்களது இளம் வயதிலேயே பிரபலமடைந்து ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகைகளின் ரேஞ்சுக்கு இடம் பிடித்தவர்கள் சிலர் உள்ளார்கள் அந்த வகையில் தனது 25 வயதிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து தெலுங்கு சினிமாவில் மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகை நிவேதா தாமஸ்.
இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு இருப்பதால் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. நிவேதா தாமஸ் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து போராளி, நவீன சரஸ்வதி சபதம்,ஜில்லா, பாபநாசம், தர்பார் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுவும் முக்கியமாக பாபநாசம் திரைப்படம் தான் இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
பாபநாசம் திரைப்படத்தின் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்த காரணத்தினால் தான் ரஜினி நடிப்பில் வெளிவந்த தர்பார் திரைபடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு கடைசியாக இவர் சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த வக்கீல் ஷாப் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இத்திரைப்படத்தில் இவரின் கேரக்டர் கலவை விமர்சனத்தை தான் பெற்றது.
இந்நிலையில் சமீப காலங்களாக தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிவேதா தாமஸ் தற்பொழுது புடவையில் அரேபிய குதிரை போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.