2016 ஆம் ஆண்டு ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ், இதனை தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் ஆக எத்தனை படங்களில் நடித்துள்ளார்.
தற்பொழுது இவர் பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார், பொதுவாக ரசிகர்கள் நடிகர்களின் மேல் உளள அதிக அன்பினால் அவர்களின் பெயர்களை பச்சை குத்தி கொள்வார்கள், அதிலும் குறிப்பாக அஜித், விஜய் ரசிகர்கள் அவர்களின் செல்லப் பெயரை பச்சை குத்திக்கொள்வது அதிகமாக பார்த்துள்ளோம்.
ஆனால் ஒரு சில ரசிகர்கள் மட்டும்தான் நடிகைகளின் மேலுள்ள அன்பினால் அவர்களின் பெயர்களை பச்சை குத்திக் கொள்வார்கள் அந்த வகையில் ரசிகர் ஒருவர் நிவேதா பெத்துராஜ் பெயரை பச்சை குத்திக் கொண்டார்.
நிவேதா பெத்துராஜ் தற்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் இவரின் தீவிர ரசிகரான பிரபு என்பவரை நேரில் சந்தித்து அவருடன் கொஞ்ச நேரம் பேசிவிட்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
பாண்டிச்சேரியில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பொழுது அவரை நேரில் அழைத்து தனது மகிழ்ச்சியை தெரியப்படுத்தி அந்த ரசிகரை சந்தோஷம் அடைய செய்துள்ளார்.
அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நிவேதா பெத்துராஜ் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
