தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நித்யா மேனன். இவர் சமீப பேட்டி ஒன்றில் தமிழ் நடிகர்கள் ரொம்பவே மோசமானவர்கள் என நித்யா மேனன் கழுவி ஊற்றி இருக்கும் நிலையில் அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் கவர்ச்சியில் ஆர்வம் காமித்து வருகிறார்கள் அப்படி கவர்ச்சி என்ற ஒன்றுக்கு முழுக்கு போட்ட ஒருவர் தான் நித்யா மேனன். மலையாள சினிமாவின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவருக்கு பத்திரிக்கையாளராக தான்ஆக வேண்டும் என விருப்பத்துடன் இருந்து வருகிறார். அதன் பிறகு மேலும் சினிமாவின் மீது இருந்த ஆர்வம் அதிகரிக்க பூனே திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பை படித்து முடித்தார்.
இதன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் மலையாளத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். அதன் பிறகு தெலுங்கு, தமிழ் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றுள்ளார் இவ்வாறு நடிகை மட்டுமல்லாமல் பின்னணி பாடகையும் ஆவார். அந்த வகையில் துல்கர் சல்மான் உடன் ஓகே கண்மணி திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், விஜய்யுடன் மெர்சல், உதயநிதியுடன் சைக்கோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இன்னும் சில திரைப்படங்களிலும் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துவரும் இவர் சமீப பேட்டி ஒன்றில் தமிழ் நடிகர்கள் குறித்து பேசி இருக்கும் நிலையில் இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது சமீப பேட்டியில், அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒரு விஷயம் நிறைய நடிகைகளுக்கு நடந்து வருகிறது ஆனா எனக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை கொடுத்தது ஒரு தமிழ் நடிகர் தான் என வெளிப்படையாக கூறியுள்ளார் இவர் தனுஷ், விஜய், உதயநிதி அவர்களுடன் நடித்திருக்கும் நிலையில் இவர்களில் யாராக இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள் தமிழ் நடிகர்கள் மட்டுமல்ல அனைத்து நடிகர்களும் அப்படித்தான் என கூறி வருகிறார்கள்.