சினிமா உலகில் ஒரு நடிகையை தொடர்ந்து சினிமாவில் பயணிக்க வேண்டும் தனது உடல் எடையை பிட்டாக தெரிந்தால் மட்டுமே சாத்தியம் என கூறி தற்போது வரை இருக்கும் நடிகைகள் பலரும் தனது கொழுக்கு மொழுக்கு உடலமைப்பை குறைத்து ஸ்லிம் ஆக மாறி வருகின்றனர் ஆனால் இதில் இருந்து மாறுபட்ட கருத்து தவறாக விளங்கி வருகிறார் நித்யா மேனன்.
இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை தனது உடலமைப்பை வைத்துக்கொண்டு சினிமா உலகில் நடித்து வருகிறார் மேலும் தனது உடல் அமைப்பின் மூலம் பல கோடி ரசிகர்களையும் தக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தமிழில் 180 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனையடுத்து காஞ்சனா-2 ஓ காதல் கண்மணி ருத்ரம்மா 24 இருமுகன் மேர்சல் போன்ற முக்கியத்துவம் உள்ள கதைகளில் இருந்து எடுத்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.
இவர் தமிழில் மட்டும் தனது திறமையை வெளிப்படுத்தாமல் பிற மொழிகளான மலையாளம் ,தெலுங்கு போன்ற வற்றிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இவர் கடைசியாக மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த சைக்கோ என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது வெப் சீரியஸ்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் நித்தியா மேனன் 15 கிலோ எடையை குறைத்து அவள் சற்று மாறி போயுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் உடல் எடையை குறைத்து இருக்க வேண்டாம் கொழுக் மொழுக்கென்று நல்லாதான் இருக்கிறீர்கள் என்று கூறிவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.