என்னை அப்படி யாரும் கூப்பிடாதீங்க.. ரொம்ப கஷ்டமாக இருக்கு ரசிகர்களிடம் கேட்டுக் கொண்ட நித்யா மேனன்.

nithya-menen
nithya-menen

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் தனுஷ் அண்மைக்காலமாக அவரது படங்கள் திரையரங்கில் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்த படம் சூப்பராக இருந்த காரணத்தினால் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் திரையரங்கை நாடி படத்தை பார்த்து வருகின்றனர்.

இந்த படம் முழுக்க முழுக்க அப்பா சென்டிமென்ட், காதல், ஃப்ரெண்ட்ஷிப் என அனைத்தையும் எடுத்துரைக்கும் ஒரு படமாக இருக்கிறது இந்த படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து நித்தியா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானிசங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர்.

இந்த படம் தற்பொழுது வசூல் ரீதியாக அடித்து நொறுக்குகிறது. இதுவரை மட்டுமே சுமார் 60 கோடிக்கு மேல் வசூல் அள்ளியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படம் இன்னும் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருப்பதால்..

நிச்சயம் இந்த திரைப்படம் 100 கோடியை அள்ளி நிக்கும் என படத்தில் நடித்தவர்களும் சரி படத்தை பார்த்த பலரும் சொல்லி வருகின்றனர்.  நடிகர் தனுஷுக்கு  இது ஒரு திருமுனை படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து நித்யா மேனன் சூப்பராக நடித்திருந்தார்

அவருடைய சிரிப்பு மற்றும் நடிப்பு வேற லெவலில் இருந்தது ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர் இந்த படத்தில் தாய் கிழவி என்ற பாடல் நித்யா மேனனுக்காக தனுஷ் பாடியிருந்தார் இப்பொழுது ரசிகர்கள் பலரும் நித்தியா மேனனை செல்லமாக தாய்க்கிழவி என கூப்பிட்டு வருகின்றனர் இதை பார்த்த அவர் பேட்டி ஒன்றில் என்னை யாரும் அப்படி கூப்பிடாதீர்கள் என செல்லமாக சிரித்தபடி ரசிகர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.