Pandiyan stores 2 serial update: ஏராளமான நடிகைகள் தங்களது இளமை காலத்தில் முன்னணி நட்சத்திரமாக வளம் வந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வயதான காரணத்தினால் தங்களுக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருவது வழக்கம். அப்படி தற்பொழுது பிரபல நடிகை நிரோஷா விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
எம் ஆர் ராதாவின் இளைய மகளும் நடிகை ராதிகா சரத்குமாரின் சகோதரி ஆன நிரோஷா தனது இன்ஸ்டாகிராமில் மூர்த்தி என மக்கள் மனங்களில் பதிந்துள்ள நடிகர் ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்கிறேன் என போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நிரோஷா மீண்டும் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க தொடர்ந்துள்ளார். அதன்படி ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் ரஜினியுடன் இணைந்து முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 2விலும் நடிக்க தொடங்கியுள்ளார் விஜய் டிவியில் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுமார் 5 வருடங்களுக்கு மேலாக ஏராளமான மாற்றங்களுடன் ஒளிபரப்பாகி வந்த முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினையும் கூட்டு குடும்பத்தையும் மையமாக வைத்து உருவாகி வந்த இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவ்வாறு விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைவடைய இருக்கும் நிலையில் இரண்டாவது சீசனுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகத்தில் மூர்த்தியாக நடித்த ஸ்டாலினை தவிர அனைவருமே இரண்டாவது பாகத்தில் புதிதாக அறிமுகமாகி இருக்கின்றனர். இதில் எம் மகன் கதையை அடிப்படையாகக் கொண்டு தந்தைக்கும் மகன்களுக்கும் இடையே நடக்கும் பாசம் போராட்டத்தின் கதையாக உருவாகியுள்ளது.
இவ்வாறு இதில் மூர்த்திக்கு ஜோடியாக சுஜிதா நடித்த கேரக்டரில் நிரோஷா மூர்த்தியின் மனைவியாக நடித்துள்ளார். லால் சலாம் படம் முடித்த கையோடு சின்னத்திரைக்கு அறிமுகமாகியுள்ளார் லால் சலாம் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.