தமிழில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி சீசன் சீசன் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தமிழில் தொடங்கப்படுவதற்கு முன்பே தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஆரம்பிக்கப்பட்டு பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதைப்போல் தமிழிலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தற்போது வரை தமிழில் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் கூடிய விரைவில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியை இதுவரை கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அடுத்து ஒளிபரப்பாக உள்ள ஆறாவது சீசனையும் கமல் தொகுத்து வழங்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த நிலையில் கடைசியாக நிறைவு பெற்ற பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் 5 யில் டைட்டில் வின் செய்தார், அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பிரியங்கா மற்றும் அடுத்தடுத்த இடங்களில் நிரூப், பாவனி, அமீர் போன்றோர் பிடித்திருந்தனர்.
இதனிடையே மீடியா உலகில் மாடல் பிரபலமாக இருந்து பிக் பாஸ் ஐந்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பரீட்சயமானவர் நீரூப். இந்த நிகழ்ச்சிக்கு முன்பு நிரூப்பை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் பிக் பாஸ் 5 மூலம் அதிக ரசிகர்களைக் கொண்டவர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகும் ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அதிலும் தனது திறமையை வெளிப்படுத்தி பிக்பாஸ் அல்டிமேட்டில் ரன்னர் அப் ஆனார்.
பிக் பாஸ்க்கு பிறகு ஒரு சில படங்களில் கமிட் ஆகியும் நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நிரூப் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு புதிய கெட்டபில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் பெற்று வருகின்றன. இதோ இந்த புகைப்படம்..