Ninaithaen vanthai movie, vanna nilavey song Truth to be revealed after 22 years :கே செல்வபாரதி இயக்கத்தில் 1998-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நினைத்தேன் வந்தாய். இத்திரைப்படத்தில் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் இவருக்கு ஜோடியாக முன்னனி நடிகைகளான ரம்பா மற்றும் தேவயானி நடித்திருந்தனர். மேலும் சில துணை நடிகர்களான மணிவண்ணன், சார்லி போன்றோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் விஜய் ஒரு இசை கலைஞராக நடித்திருப்பார். மேலும் அவரது கனவில் ஒரு பெண்ணை பார்த்திருப்பார். ஆனால் அந்த பெண்னின் முகம் தெரியாமல் அவருடைய இடுப்பில் உள்ள மச்சத்தை அடையாளமாக வைத்து அந்த பெண்ணை தேடி வருவார். மேலும் இந்த படத்தில் வண்ண நிலவே வண்ண நிலவே என்ற ஒரு பாடலில் ரம்பா முகத்தை மூடி வருவது போன்ற காட்சியை காண்பித்து இருப்பார்கள். அந்த மச்சத்தை வைத்து அது ரம்பா என்று அனைவரும் நினைத்து உள்ள நிலையில்.
தற்போது வெளிவந்த உண்மை என்ன வென்றால் அந்த நேரத்தில் ரம்பாவுக்கு கால்ஷீட் கிடைக்கவில்லையாம். அந்த நேரத்தில் நடிகை ரம்பா சிரஞ்சீவியின் தெலுங்கு படத்தில் நடித்து கொண்டிருந்தாரம். எனவே அந்த பாடலை வேறு ஒரு நடிகையை வைத்து எடுத்து உள்ளார்களாம். தற்போது இந்த செய்தி 22 வருடம் கழித்து இணையதளத்தில் வெளியாகி காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளார்களாம்.