ரசிகர்கள் சொன்னதை.. உறுதி செய்த நிக்கி கல்ராணி – ஆதி ஜோடி.! நிச்சயதார்த்த புகைப்படங்கள் இதோ.

nikki-galrani
nikki-galrani

சினிமா உலகில் நடிக்கும் நடிகர் நடிகைகள் காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழுகின்றனர் நல்ல புரிதல் இருக்கும் ஜோடிகள் குழந்தைகளை பெற்று நீண்ட வருடங்களாக வாழ்கின்றனர்.  அந்த வகையில் அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா போன்றவர்களை..

தொடர்ந்து இப்பொழுது  ஆதியும், நிக்கிகல்ராணியும் காதலித்து வருவதாகவும்.. நிச்சயம் கல்யாணம் செய்து கொள்வார்கள் என பல தகவல் வெளி வந்த நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதி நிக்கி கல்ராணி இருவருக்கும்  நிச்சயதார்த்தம் முடிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஆதி மிருகம், ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவான், கோச்சடையான்  போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு தமிழை தாண்டி தெலுங்கிலும் நல்ல எதிர்காலம் கிடைத்துள்ளது. தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த இவர் பிரபல நடிகை நிக்கி கல்ராணியை தற்பொழுது திருமணம் செய்யப்போகிறார்.

நிக்கி கல்ராணி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார். தமிழில் இவர் கடைசியாக ராஜவம்சம் என்ற திரைப்படத்தில் நடித்தார் அதனைத் தொடர்ந்து இவரது கையில் இடியட் என்ற திரைப்படம் இருக்கிறது. இவரும் சினிமாவுலகில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்ற நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

இதோ நிச்சயதார்த்தம் முடிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்ன பொருத்தமான ஜோடி.. இந்த ஜோடி இதற்கு முன்  ஒரு படத்தில் மட்டும் இணைந்து நடித்துள்ளனர். அந்த திரைப்படம் யாகாவாராயினும் நாகாக்க என்பது குறிப்பிடதக்கது.

adhi and nikki
adhi and nikki
adhi and nikki
adhi and nikki