Nikki galrani : மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு பல நடிகைகள் படையெடுத்து வருகிறார்கள் அந்த வகையில் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் சினிமாவில் முதன்முதலாக 2014 ஆம் ஆண்டு தான் அறிமுகமானார் அறிமுகமான முதல் திரைப்படமே மலையாள திரைப்படம் தான் மலையாளத்தை தொடர்ந்து கன்னடம் தமிழ், தெலுங்கு, என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
முதன்முதலாக தமிழ் சினிமாவில் 2015 ஆம் ஆண்டு டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் தான் நடித்த முதல் திரைப்படம் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அதனால் இவருக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்தது ஆனால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் பெரிதாக கை கொடுக்கவில்லை.
அந்த வகையில் தமிழில் யாகாவராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா, கலகலப்பு 2, பக்கா, தேவ், சார்லி சாப்ளின் 2, ராஜ வம்சம், இடியட் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த நிக்கி கல்ராணி 31 வயதில் நடிகர் ஆதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். திருமணத்திற்கு முன்பு தான் நிக்கி கல்ராணி சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ஆனால் திருமணத்திற்கு பிறகும் நிக்கி கல்ராணி கொஞ்சம் கூட மாறாமல் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
அந்த வகையில் தற்போது நிக்கி கல்ராணி பெட்டில் தாமரை பூ மலர்ந்தது போல் பிரஷ்ஷாக படுத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அது மட்டும் இல்லாமல் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிஞ்சு மனச பாடாய் படுத்தாதீங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.