சினிமா உலகில் எப்படி நடிகர் நடிகைகள் வரவேற்பு வருடம் வருடம் அதிகரித்து உள்ளது அது போல இசையமைப்பாளர்களின் வரவேற்பும் அதிகரித்து உள்ளது இளம் தலைமுறை இசையமைப்பாளர் தான் தற்போது டாப் நடிகர்கள் படங்களுக்கு இசை அமைத்து வருகின்றனர்.
அந்த வகையில் சமீபகாலமாக உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருபவர் இசையமைப்பாளர் அனிருத். இவரது அப்பா தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ரஜினியின் நெருங்கிய உறவினரின் பையன் அனிருத் என்பதால் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
அதற்கு ஏற்றார் போல தனது திறமையை வெளிக்காட்டி தற்போது சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார். கடைசியாக கூட தளபதி விஜயுடன் கைகோர்த்து மாஸ்டர் படத்திற்கு இசை அமைத்தார் அதனை தொடர்ந்து இப்போது இவர் பீஸ்ட், டான், விக்ரம் போன்ற பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இதனால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக உருமாறி உள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் தமிழ் தாண்டி தெலுங்கு படத்திலும் தன்னை தலைகாட்ட ரெடியாக இருக்கிறார் அனிருத். இதனால் அவரது பயணம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. சினிமா உலகில் தொடர் வெற்றியை கண்டு வந்தாலும் அவ்வபோது சில சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். ஆம் பல நடிகைகளுடன் அப்போது இவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கும்.
ஏன் அண்மையில் கூட மாஸ்டர் படம் நடிகை மாளவிகா மோகனன் உடனே இவர் இரவு நேரத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரல் ஆனது. இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஐக்கி பெர்ரிவுடன் இவர் ஏற்கனவே எடுத்துக் கொண்ட இரவு நேர பார்ட்டி புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..