அடி சக்க இனிமேதான் இருக்கு சக்காளத்தி சண்டையே… குடிமியை பிடித்துக் கொண்டு அடித்துக் கொள்ள போகும் பாக்கியா ராதிகா..!

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலமடைந்துள்ளது இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த  நிலையில் அடுத்த வாரம் எபிசோட்டில் இந்த சீரியலில் இன்னும் பரபரப்பு அதிகரிப்பதற்காக ராதிகா பாக்யா வீட்டிற்கு பெட்டியும் படுக்கையும் எடுத்துக் கொண்டு வருகிறார்.

இன்றைய எபிசோடில் கோபி குடித்துவிட்டு தடுமாறியதால் எழில் கோபியை கூட்டிக்கொண்டு பாக்கிய வீட்டிற்கு வருகிறார். அதற்கு காரணம் கோபி ராதிகா வீட்டிற்கு போகாதே என புலம்பியதுதான். பாக்கியா வீட்டிற்கு வந்த கோபியை ஈஸ்வரி பார்த்து கதறி அழுவதுடன் இனிமேல் கோபி இங்கே தான் இருப்பான் அவனுடைய வாழ்க்கை வீணாவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என வீட்டில் இருக்கும் அனைவரிடமும் கூறிவிடுகிறார்.

இதனால் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார் அது மட்டும் இல்லாமல் ராமமூர்த்தி என்னை மன்னிச்சிடுமா இந்த நேரத்துல அவன் போன எங்கேயாவது ஆக்சிடன்ட் ஆகி விழுந்திடுவான் அதனால நைட்டு மட்டும் தங்கிக்கிட்டும் என ராமமூர்த்தி பாக்யாவிடம் கூறுகிறார் அதற்கு பரவால்ல மாமா என பாக்யா கூறுகிறார் அடுத்த நாள் காலை விடிகிறது.

அதேபோல் அந்த பக்கம் ராதிகா வீட்டில் ராதிகாவின் அம்மா பாக்யாவிற்கு ஆறுதலாக பேசுகிறார் அவர் குடித்துவிட்டு வருவதற்கு சங்கடப்பட்டு கொண்டுதான் நண்பர்கள் வீட்டில் படுத்து இருப்பார் அல்லது ஆபீசில் படுத்திருப்பார் என கூறுகிறார். அடுத்த நாள் காலையில் விடிந்ததும் ராதிகா வெளியில் வந்து பார்க்கும் பொழுது பாக்யா வீட்டில் கோபியின் கார் நிற்கிறது.

இதைப் பார்த்த ராதிகா அதிர்ச்சி அடைகிறார் அது மட்டும் இல்லாமல் அழுது கொண்டு அவர் அம்மாவிடம் கூறுகிறார். பாக்யாவின் வீட்டில் ஈஸ்வரி  இனிமேல் கோபி வீட்டிலேயே தான் இருப்பான் என கூறுகிறார் இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார் அது மட்டும் இல்லாமல் ஈஸ்வரிடம் எழில் சண்டை போடுகிறார். அவர் ஏன் இங்கே இருக்கணும் அவர்தான் வீட்டுக்கான பணத்தை கொடுக்க சொல்லி இன்ஸ்டால்மெண்ட்ல வாங்கிகிட்டு இருக்காரு அப்புறம் எதுக்கு இங்க இருக்கணும் என எழில் ஈஸ்வரி பாட்டி இடம்  சண்டை போடுகிறார்.

அதேபோல் இனியவும் அப்பா இனி இங்க தான் இருப்பாரா பாட்டி என கேட்க அவர் உற்சாகமடைகிறார். உடனே வீட்டிலிருந்து பாக்கியா வந்து கோபி இங்க இருக்கிறது இருக்கட்டும் நான் இப்ப என்ன பண்ணனும் அதையும் நீங்களே சொல்லிடுங்க என கேட்கிறார். உடனே எழில் செழியன் என அனைவரும் அதையும் நீங்களே சொல்லிடுங்க என கேட்க அதிர்ச்சியடைகிறார். அதுமட்டுமில்லாமல் பாக்கியா அதிரடியாக நான் வீட்டை விட்டு கிளம்பிடவா என கேட்கிறார். இதனால் பாக்கிய வீடு அதிர்ச்சி அடைகிறது.

மற்றொரு பக்கம் ராதிகா தன்னுடைய பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கொண்டு கணவன் இருக்கும் இடமே மனைவி இருக்க வேண்டும் என பாக்யாவின் வீட்டிற்கு பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு வந்து நிற்கிறார். அப்பொழுது கோபி அவரின் அம்மாவிடம் ராதிகாவை விட்டுட்டு என்னால் வர முடியாது நான் அங்கேயே செல்கிறேன் என கூறிக்கொண்டு வெளியே செல்லும் பொழுது ராதிகா வந்து நிற்கிறார்.

ராதிகா கோபி வீட்டில் இருந்தால் இனிமேல் சக்காளத்தி சண்டை அதிகமாக இருக்கும் ரசிகர்களுக்கும் பரபரப்பாக இருக்கும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.