சிக்ஸ்பேக்கை அடுத்து வேட்டி சட்டையில் கெத்தாக போஸ் கொடுத்த சூரி இணையதளத்தில் வைரலாகி வரும் புகைப்படம்.!

soori

வெள்ளித்திரையில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் வெண்ணிலா கபடிக்குழு இந்த திரைப்படத்தில மூலம் ரசிகர்களிடையே புகழ் பெற்று விளங்கியவர் தான் சூரி இவர் இந்த திரைப்படத்தில் பரோட்டா காமெடியில் நடித்ததால் இன்றுவரை அவரது ரசிகர்களால் பரோட்டா சூரி என்று தன் அழைக்கப்படுவார்.

அதனைத் தொடர்ந்து சூரி களவாணி, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, புலிவால், தேசிங்குராஜா, மாப்பிள்ளை சிங்கம் என பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார் இவர் பிரபல முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா,சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார்.

மேலும் இவர் சிவகார்த்திகேயனோடு சீமராஜா, ரஜினிமுருகன், கேடி பில்லா கில்லாடி ரங்கா, மான்கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கியது மட்டுமல்லாமல் தற்போது வரை சிவகார்த்திகேயனும் சூரியும் அண்ணன் தம்பி உறவுகளில் இருந்து வருகிறார்கள்.

சூரி தற்பொழுது ரஜினி நடித்துவரும் அண்ணாத்த திரைப்படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாகவும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூரி சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பட்டு சட்டை பட்டு வேட்டியில் இருக்கும் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்களுடன் சேர்ந்து சூரி என்னதான் ஜீன்ஸ், டீசர்ட் போட்டாலும் வேட்டி சட்டை போட்டாலே தனி கெத்து தான் டா என்று பதிவு செய்துள்ளார்.

அவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

soori
soori