நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு சுவாரஸ்யமான தகவலை தெரிவித்திருக்கும் நிலையில் அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ் கீதாஞ்சலி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதனை அடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அப்படி கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் புரட்சி பெண்ணாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் கீர்த்தி சுரேஷின் கேரக்டரும் பாராட்டப்பட்டது.
இதனை அடுத்து தெலுங்கில் சிரஞ்சீவி உடன் போல ஷங்கர், ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கீர்த்தி சுரேஷ் குறித்து பேசி உள்ளார்.
அதில் தமிழ் சினிமாவில் அழகும் அதிர்ஷ்டமும் கலந்த ஒரு நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான் குறுகிய காலகட்டத்திலேயே பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து விட்டார். இவரை தமிழில் அறிமுகமாக்கியது ஏ.எல் விஜய் தான். அந்த படம் தோல்வியை சந்தித்தாலும் கீர்த்தி சுரேஷ்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
நடிகை சாவித்திரி பயோபிக்கில் படமான மகாநதி படத்தில் நடிக்க இயக்குனர் கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்தார் அப்பொழுது கீர்த்தி சுரேஷ் எங்க நடிகையர் திலகம் சாவித்திரி எங்கே என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் அந்த விமர்சனத்திற்கு எல்லாம் தனது நடிப்பால் சரியான பதிலடி கொடுத்தார் தனது நடிப்பின் மூலம் சாவித்திரியை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
சமீபத்தில் தனது உடல் எடையை குறைந்ததால் பலரும் இவரை விமர்சனம் செய்து வந்த நிலையில் பிறகு மேலும் உடல் எடையை கூட்டி தற்போது அழகில் ஜொலித்து வருகிறார். இவ்வாறு நடிப்பதையும் தாண்டி நடிகை கீர்த்தி சுரேஷ் நன்றாக கவிதை எழுதக்கூடிய ஒருவர் அவர் எழுதிய கவிதைகளும் பத்திரிக்கைகளில் வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பு தளங்களில் ஓய்வு நேரத்தில் புத்தகம் படித்து வருகிறார்.
ஜெயலலிதா தான் படப்பிடிப்பு தளத்தில் புத்தகம் படிப்பார் அவர் படித்ததாக புத்தகம் வாசிப்பதில் ஈடுபாடு கொண்ட நடிகையாக கீர்த்தி சுரேஷ் இருக்கிறார். இவை அனைத்தும் தெரிந்துக் கொண்டு தான் நடிகர் கமலஹாசன் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் அழகும் அறிவும் கொண்ட நடிகை என்று பாராட்டு இருந்ததாக செய்யாறு பாலு ஏராளமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.