சூப்பர்ஸ்டாரின் மறுஉருவமே அஜித்தான்.! சிம்பு அதிரடி பேச்சு.

ajith simbu-tamil360newz
ajith simbu-tamil360newz

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பின்னாட்களில் மிகப் பெரிய நடிகராக ஒரு மாறியவர் நடிகர் சிம்பு. இவர் சிறுவயதிலிருந்து ரஜினியின் தீவிர ரசிகன். ரஜினியின் படங்கள் திரையரங்கில் வெளிவந்தால் முதல் நாள் முதல் ஷோ போய் பார்த்து கொண்டாடி வந்தவர் சிம்பு.  பின்னாட்களில் இவர் ஹீரோவாக தன்னை சினிமாவுலகில் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

ரஜினியின் தீவிர ரசிகன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அவரது படங்களின் டைட்டில் கார்டில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு என்ற பட்டத்தை இணைத்து கொண்டார் சிம்பு. ரஜினியின் தீவிர ரசிகனான இவர் திடீரென அஜித்தின் ரசிகனாக மாறி சினிமா உலகிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தொடு மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது

எப்படி ரஜினியின் படங்களை முதல் நாள் சென்று எப்படி பார்த்தாரோ அதேபோல அஜித்தின் படங்களையும் அவ்வாறு சென்று பார்க்க தொடங்கினார். நான் அஜித்தின் தீவிர ரசிகன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக பல பேட்டிகளிலும், மேடைகளிலும் நான் அஜித்தின் ரசிகன் என்று வெளிப்படையாககூறியுள்ளார்.

இந்த நிலையில் ஊடகங்கள் பல  நீங்கள் முதலில் ரஜினியின் ரசிகராக இருந்து பின்னாட்களில் அஜித்தின் ரசிகராக மாறியது ஏன் என்று கேட்டுள்ளனர் அதற்கு அவர் கூறுகையில் ரஜினியின் மறுஉருவம் அஜீத் தான் சிம்புளாக பதிலளித்தார் மேலும் அஜித் தான் என்னை பொறுத்தவரை ரியல் ஹீரோவாக தெரிகிறார் மேலும் அஜித் அவர்களை ரொம்ப எனவும் அவர் கூறினார். இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் சிம்பு சொன்னது உண்மை தற்பொழுது ரஜினியின் மறுஉருவம் அஜீத் தான் அது யாராலும் மாறுக்க முடியாது என கூறிவருகின்றனர்.