Vijay next super star : தமிழ் சினிமாவில் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை தளபதி என அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய், இவர் சமீபகாலமாக வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி வருகிறார், கடைசியாக வெளியாகிய பிகில் திரைப்படம் அதற்கு உதாரணம்.
தென்னிந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸில் வசூல் மன்னனாக வலம் வரும் விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது அதனால் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார் அப்பொழுது ரசிகர் ஒருவர் நடிகர் விஜய் குறித்து ஒரே வார்த்தையில் கூறுங்கள் என கேட்டுள்ளார், அதற்கு பதில் அளித்த நிதி அகர்வால் “என்னை வியக்க வைக்கும் நட்சத்திரம் அவர் ஒரு சூப்பர் ஸ்டார்” என ஒரே வார்த்தையில் கூறியுள்ளார்.
நடிகை நிதி அகர்வால் தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பூமி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், இவருக்கு தமிழ் சினிமாவில் இது தான் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.