தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று அன்போடு அழைக்கப்படுபவர் சிவாஜி இவரை நடிகர் சக்கரவர்த்தி சிம்மக் குரலோன் எனப் போற்றப்படுவார். இன்று வரை சிவாஜி நடிப்பிற்கு ஈடு இணை இல்லை என பலரும் கூறி வருகிறார்கள் ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த சிவாஜி பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
கம்பீரமான குரல் தெளிவான உணர்வு பூர்வமான தமிழ் உச்சரிப்பு சிறந்த நடிப்பு திறமை என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது இவருக்கு அப்பொழுதே கோடிக்கணக்கான ரசிகர் கூட்டம் இருந்தது. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று அதே கதாபாத்திரமாக மாறி நடித்து விடுவார், அந்த அளவு நடிப்பு திறமை அதிகம், அதே போல் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர்.
நடிகர் சிவாஜி கணேசன் தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஒட்டுமொத்தமாக 288 திரைப்படங்களில் நடித்துள்ளார் தமிழில் 250 திரைப்படங்களுக்கு மேல் நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் தான். அதேபோல் படப்பிடிப்பு இருக்கிறது என்றால் 7 மணிக்கு படபிடிப்பு என்றால் 6 மணிக்கு ஆஜராகி விடுவார்.
இப்படி சிவாஜிக்கு அடுத்து அதே குணம் கொண்ட ஒரே நடிகர் விஜய் மட்டுமே ஏனென்றால் ஒன்பது மணிக்கு ஷூட்டிங், ஆனால் கொட்டும் மழையில் எட்டு மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தவர் தளபதி விஜய்.
தயாரிப்பாளர்களின் வலியை இவரும் புரிந்து கொண்டவர் என தளபதி விஜய் பற்றி பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பெருமையாக பேட்டியில் கூறியுள்ளார். தளபதி விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் விஜய் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு விருதை வழங்கி சிறப்பித்தார். இப்படி விஜய் பல நற்செயல்களை கால காலமாக செய்து வருகிறார்.