செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர் “சீரியல் நடிகரை” காதலிக்கிறாரா.? சேர்ந்து இருக்கும் புகைப்படம்.

kanmani-sekar-

சன் டிவியில் மிகவும் பிரபலமான செய்தி வாசிப்பாளராக திகழ்ந்து வருபவர் கண்மணி சேகர்.இவர் இதற்குமுன் மாலைமுரசு ஜெயா டிவி நியூஸ் 18 போன்ற பல டிவி நிகழ்ச்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.ஆனால் சன் டிவி மூலமே மக்களிடையே பெரிதும் பிரபலமடைந்து காணப் பட்டு வருகிறார்.

இந்த நிலையில் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு இளம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது தமிழ் உச்சரிப்பின் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுவரை சிங்கிளாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த கண்மணி சேகர்.

தற்போது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அவரது இன்ஸ்டா பக்கத்தில்  ஃபேமிலி என பதிவிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகரான இதயத்தை திருடாதே சீரியலின் நடிகர் நவீன் உடன்  இருக்கும் புகைப்படத்தை கண்மணி பதிவிட்டுள்ளார்.

நடிகர் நவீன் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே என்ற சீரியல் மூலம் பல ரசிகைகளை தக்க வைத்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நவீன் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்  அவர் தமிழில் வெளிவந்த மசாலா படம், பூலோகம்,  மிஸ்டர் லோக்கல், போன்ற திரைப்படங்களிலும் ஒரு முக்கிய ரோலில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் நடிகர் நவீன் மற்றும் கண்மணி சேகர் இருவருமே அவர்களது இன்ஸ்டா பக்கத்தில் இருவரும் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு காதலிப்பதை உறுதி செய்துள்ளனர். இது செய்தி தற்போது கண்மணி ரசிகர்கள் சிலருக்கு வருத்தமாக இருந்தாலும் மக்கள் பலருக்கும் மகிழ்ச்சியாகவே உள்ளது.

navin
navin