பொதுவாக சினிமாவை பொருத்தவரை ஏராளமான பிரபலங்கள் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி திடீரென அவர்கள் பிரிந்து விட்டதாகவும் இது குறித்த சர்ச்சைக்குரிய தகவல்களும் வெளியாவது வழக்கமாக இருந்து வருகிறது. அப்படி காதலித்த நட்சத்திர ஜோடிகள் பிறகு காதலித்தவரை திருமணம் செய்துக் கொள்ளாமல் வேறு நபரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருபவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் பற்றிய தகவல்களை தற்பொழுது பார்க்கலாம்.
நயன்தாரா: இந்த லிஸ்டில் முதலில் இருப்பவர்தான் நயன்தாரா இவர் வல்லவன் திரைப்படத்தில் நடித்த பொழுது சிம்பு – நயன்தாராவிற்க்கு இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது மேலும் இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு இவர்கள் பிரிந்து விட்டதால் நயன்தாரா பிரபுதேவாவுடன் சுற்றி வந்தார். இவர்களுடைய காதல் திருமணம் வரையிலும் சென்று பிறகு இறுதியாக பிரிந்து விட்டனர். இப்படிப்பட்ட நிலையில் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இவர்களுக்கு இரட்டை குழந்தையும் உள்ளது.
வரலட்சுமி சரத்குமார்: வரலட்சுமி சரத்குமார் மற்றும் விஷால் இருவரும் இணைந்து சில திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்ததால் இருவரும் காதலித்து வந்ததாக தகவல் வெளியான நிலையில் இவர்களுக்கிடையே சில மனக்கசப்பு காரணமாக பிரிந்து விட்டனர். இவரை அடுத்து விஷால் வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில் அந்த திருமணமும் நடைபெறவில்லை.
தமன்னா: பையா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது கார்த்திக்கும் தமன்னாவும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த சமயத்தில் சூர்யா-ஜோதிகா திருமணத்தினால் இவர்களுடைய அப்பா சிவகுமார் கடுப்பிலிருந்ததால் பிறகு கார்த்தி தமன்னாவை பிரிந்து விட்டார்.
விஜய்: அதாவது நடிகர் விஜய் நடிகை சங்கவியை துரத்தி துரத்தி காதலித்து வந்த நிலையில் பிறகு தன்னுடைய சினிமா கேரியரில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக சங்கவியை பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. பிறகு விஜய் தன்னுடைய அம்மா அப்பா பார்த்து வைத்த சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.
அஜித்: நடிகை ஹீராவை காதலித்து வந்த அஜித் இவருடன் சில இடங்களுக்கும் ஒன்றாக சென்றுள்ளார். அது குறித்த புகைப்படங்களும் வெளியான நிலையில் பிறகு ஷாலினியை திருமணம் செய்துக் கொண்ட இவர் ஷீராவை மறந்து விட்டார்.