விராட் கோலியை பற்றி செய்தியை அணுஅணுவாக பிசிசிஐக்கு போட்டுக்கொடுத்தது.! இந்த சீனியர் வீரர் தானாம்.? வெளிவந்த உண்மை தகவல்..

virat-kohli-
virat-kohli-

இந்திய அணியில் சமீப காலமாக மூன்று வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாக ஜொலித்து வருபவர் வீராட்கோலி. கேப்டன்ஷிப் சிறப்பாக கையாண்டாலும் அவரது பேட்டிங்கில் சமீப காலமாக சொல்லிக்கொள்ளும்படி ரன் வேட்டை நடத்தவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு அவர் மீது விழுந்துள்ளது.

அதற்கு ஏற்றார் போல இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக சொல்லிக்கொள்ளும்படி பெரிய அளவில் சதம் அடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதான் இப்படி என்றால் இவரிடம் யாராவது அறிவுரை சொன்னால் என்னை குழப்பாதீர்கள் என கூறி அதை சரியாக கண்டு கொள்ளாமல் போவது மற்றும் யாரிடமாவது எரிந்து விழுவது, மற்றவர் மீது கோபப்படுவது என அவர் மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

மேலும் அந்த டாபிக் தான் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.  சமிபத்தில் விராட் கோலி தனது கேப்டன்ஷிப் பொறுப்பை வேறு ஒருவர் விட்டுக் கொடுப்பார் என பிசிசிஐ யில் இருக்கும் ஒருவர் ஏற்கனவே கூறினார். அதற்கு ஏற்றார்போல வீராட்கோலி நடக்க இருக்கின்ற 20 ஓவர் உலக கோப்பை தொடர் முடிந்த பிறகு விராட் கோலி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக பிசிசிஐக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கு பின்னால் பல விழயங்கள் இருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. கோலி சமீபகாலமாக தனக்கு பிடித்த பயிற்சியாளராக ரவி சாஸ்திரியின் கீழேதான் கேப்டன்ஷிப் பண்ணி உள்ளார் தற்பொழுது தனக்கு பிடிக்காத பயிற்சியாளரான அணில் கும்பிளே வரப்போவதால் அதற்கு முன்பு கேப்டன் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் வீராட் கோலியின் எந்த ஒரு செயலும் சரியில்லை யாரையும் மதிக்க மாட்டேங்கறார்.

மேலும் அனைவரிடத்திலும் கோபப்படுவது என எல்லாததையும் இந்திய அணியில் உள்ள ஒரு சீனியர் வீரர் பிசிசிஐ-க்கு புகார் கொடுத்துள்ளார் அந்த வீரர் வேறுயாருமல்ல தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின் எனவும் அதனால்தான் இங்கிலாந்து தொடரில் அவர் எல்லா போட்டிகளிலும் பெஞ்சிலேயே உட்கார வைத்து விட்டனர் என்றும் பிசிசிஐ பொறுப்பில் உள்ள ஒருவர் கூறி வருகிறார்.