தாஜ்மஹாலில் நடக்கும் டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிதாக வெளிவந்த புகைப்படங்கள்.!

sivakarthikeyan

சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து தற்பொழுது மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகிக் கொண்டே வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் டாக்டர் என்ற திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருக்கிறது.

மேலும் இவர் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படங்களில் ஒன்று தான் டான் திரைப்படம் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி வருகிறார் மேலும் இந்தத் திரைப்படத்திற்காக இசை அமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் பிரியங்கா அருள்மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி,சூரி,முனிஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன் போன்ற பல சினிமா பிரபலங்கள் நடித்து வருவதால் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாம் பார்த்திருக்கலாம் இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தாஜ்மஹாலில் நடைபெற்று வருகிறது.

sivakarthikeyan
sivakarthikeyan

இதில் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா கலந்து கொண்டுள்ளதால் தாஜ்மஹாலில் இந்த திரைப்படத்தின் பாடல் காட்சி எடுக்கப்பட்டு வரலாம் எனவும் தகவல் கிடைத்துள்ளது.இதனைதொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு சில புகைப்படங்கள் தற்போது மிக வேகமாக சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது இந்த திரைப்படம் எப்போது வெளியாகும்.

sivakarthikeyan

எனவும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் என்பது தெரியவில்லை அது மட்டும் தெரிந்தால் போதும் என இவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து  இந்த விஷயத்தை கொண்டாடி வருகிறார்கள்.