புத்தாண்டு வாழ்த்துக்களுடன் இந்தியன் 2 தாத்தா போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.! செம மாஸான லுக்.!

indian 2 poster

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இவரின் திரைப்படத்தை காண மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது, அதேபோல் இவர் படத்தை பிரமாண்டமாக தான் தயாரிப்பார் இந்த நிலையில் இவர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்து வரும் திரைப்படம் இந்தியன்2.

இந்த திரைப்படம் நீண்ட காலமாக தொடங்காமல் இருந்தது சமீபகாலமாக தொடங்கியது, இந்தத் திரைப்படத்தை தொடங்குவதற்கு பல சிக்கல்கள் உருவானது அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து தற்பொழுது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவாளர் நடிகர் நடிகையர் என பல மாறுதல்கள் நடைபெற்றன.

மேலும் இந்தியன்2 படத்தில் கமலஹாசனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக், சமுத்திரகனி, ஜெகன், மனோபாலா, நெடுமுடி வேணு, ஆகியோர்கள் படத்தில் நடித்து வருகிறார்கள்.

indian 2
indian 2

இந்த நிலையில் நடிகர் சங்கர் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் இந்தியன்2 தாத்தா புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது ரசிகரிடம் வைரலாகி வருகிறது.