புத்தாண்டில் மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட் என்ன தெரியுமா அது.!

vijay
vijay

master movie update: இளைய தளபதி விஜய் சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரது நடிப்பில் சென்ற வருடம் பிகில் என்ற திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்றிருந்தது.

மேலும் இந்த திரைப்படம் வசூல் வேட்டையிலும் நல்ல வசூல் பெற்றது.

இதனையடுத்து தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் டீசர் தீபாவளியை முன்னிட்டு மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது.

வெளியான நாளிலிருந்தே இந்த படத்தின் டீசர் தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்றே கூறலாம்.

vijay
vijay

மேலும் இந்த படம் 2021 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியிடப்படும் என படக்குழுவினர்கள் தெரிவித்திருந்தார்கள்.

ஆனால் அதற்கு முன்பே ரசிகர்களுக்கு சப்ரைஸ் தரும் வகையில் இந்த படத்தின் டிரைலர் வரும் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டில் வெளியாக உள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவல் தற்பொழுது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.