New video of Vijay Sethupathi movie that is still on the internet after 5 years: தமிழ் திரையுலகின் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் விஜய் சேதுபதி. இவர் தன்னுடைய சிறந்த நடிப்பு மற்றும் பேச்சு திறமை மூலமாக தற்போது ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை திரட்டி விட்டார்.
இவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஒன்றில் இறைவி திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் இயக்கி இருந்தார்.
கார்த்திக் சுப்புராஜ் தமிழில் முதல் முதலாக பீட்சா எனும் திரைப்படத்தை இயக்கிய தான் திரையுலகில் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜிகர்தண்டா மெர்குரி போன்ற பல திரைப்படங்களை இயக்கினார்.
பொதுவாக கார்த்திக் சுப்பராஜ் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் எப்படியாவது அவரை வைத்து ஒருபடம் இயக்க வேண்டும் என காத்திருந்த கார்த்திக் சுப்பராஜ்க்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் பேட்டை திரைப்படம்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தனுஷை வைத்து ஜகமே தந்திரம் எனும் திரைப்படத்தை இயக்கி உள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி இணையத்தில் வெளியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அவர் இயக்கத்தில் உருவான இறைவி திரைப்படத்தை மட்டும் யாராலும் மறக்க முடியாது ஏனெனில் அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தின் கதை மிகவும் வித்தியாசமாகவும் இருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மட்டுமல்லாமல் எஸ் ஜே சூர்யா, பாபி சிம்ஹா போன்ற பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.
இவ்வாறு வெளிவந்த இறவி திரைப்படமானது தற்போது ஐந்து ஆண்டுகளை நிறைவு பெற்றுள்ளது இந்நிலையில் சோனி நிறுவனமானது இந்த திரைப்படத்தின் ஒரிஜினல் பேக்கிரவுண்ட் ஸ்கோரை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்கள் இவ்வாறு வெளிவந்த வீடியோவானது சமூகவலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.