தல அஜித் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்த நல்ல வெற்றியை கொடுத்தார் என்பது ந ம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் தற்போது அதே கூட்டணியில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது சுமார் இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருப்பது மட்டுமில்லாமல் இந்த ஆண்டு எந்த ஒரு திரைப்படமும் தல அஜித்தின் படம் வெளியாகததன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா போன்ற முக்கிய நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள் என்பது இந்த திரைப்படத்தில் சிறந்த அம்சம்.
இந்நிலையில் இந்த திரைப்படம் மேக்கிங் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகிய ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் அதனை வைரலாகி வந்தார்கள் அதேபோல சமீபத்தில் பைக் ஸ்டாண்ட் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெறித்தனம் ஆகியது.
இந்நிலையில் வலிமை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடல் ஒன்று இந்த வாரம் இறுதியில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள். மேலும் வலிமை மூன்றாம் பாடல் வெளியாவதைத் தொடர்ந்து இதனை டுவிட்டர் பக்கத்தில் ட்ரண்ட் செய்து வருவது மட்டுமில்லாமல்.
ஆவலுடனும் உற்சாகத்துடனும் அந்த திரைப்பட பாடலை பார்க்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு தல ரசிகர்களின் ஆர்வத்தை பார்த்தால் திரைப்படம் வந்தால் மொத்த பேரும் ஒரே நாளில் தியேட்டரில் கோடி விடுவார்களோ என அச்சத்தில் இருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.