ஏகே 62 படத்தில் இருந்து வெளியான புதிய அப்டேட்.! அடுத்த வேட்டையை ஆரம்பித்த அஜித்….

ak-62
ak-62

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கலில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார் இவர் தற்போது இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு திரைப்படத்தின் மூலம் இணைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் இதை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளி வர காத்திருக்கிறது. இந்த படத்திற்காக ரசிகர்களும் காத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்திலிருந்து அடுத்த அடுத்த அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே வருகிறது அந்த வகையில் நேற்று துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் ஒரு மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்த யூடியூபில் புதிய சாதனையும் படைத்து வருகிறது.

பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் துணிவு படத்தின் பிரமோஷனுக்காக  படக்குழுவினர் தீவிரமாக பிரமோஷன் செய்து வருகிறார்கள். துணிவு திரைப்படம் வெளியாகி முடிந்தவுடன் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் அஜித்குமார்.

இது குறித்த சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியிருந்தார் அப்போது இயக்குனர் விக்னேஷ் அவர்கள் ஏகே 62-ல் அஜித் அவர்கள் தனக்கு முழு சுதந்திரமாக என்னுடைய பாணியில் உருவாக்கலாம் என்று அஜித் குரியுள்ளதாக சமிபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் ஒரு டுஸ்டை வைத்தனர் அதாவது நடிகர் அஜித் குமார் வந்தால் மட்டும் போதும் எங்களுக்கு அவர் நடிக்க வேண்டும் என்று அவசியமில்லை என்று கூறி கமெண்டில் தெரிவித்திருந்தார்கள்.

இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கம் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கு ஏற்றார் போல் ஜனவரி 17ஆம் தேதி ஏகே 62 படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் ஜனவரி மாதம் தொடங்கி தீபாவளிக்குள் ஏகே 62 படத்தை முடிக்க படக்குழுவினர் ஏகே 62 தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.