நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடுகிறார் இவர் கடைசியாக நடித்த வலிமை திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து அசத்தியது அதனை தொடர்ந்து இப்பொழுது அவர் நடித்துவரும் திரைப்படம் துணிவு படம்..
இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து வருவதால் இந்த படமும் ஆக்ஷன்க்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது. துணிவு திரைப்படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், மகாநதி சங்கர், யோகி பாபு, அஜய் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
தற்பொழுது படத்தின் அனைத்து படபிடிப்பும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்ததாக டப்பிங் பணிகளை நோக்கி நகர்ந்து உள்ளது. வெகு விரைவிலேயே துணிவு படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு நடிகர் அஜித்குமார் அடுத்ததாக நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் கைக்கோர்கிறார்.
இப்பொழுது இந்த திரைப்படம் குறித்தும் தற்போது தகவல் கிடைத்திருக்கிறது. அஜித்தின் 62 வது திரைப்படம் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
மேலும் இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் தொடங்கி ஆகஸ்ட் மாதத்தில் படத்தை முடித்து விட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.. இந்த செய்தியை தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.