தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவரை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் இவருடன் ஏதாவது ஒரு திரைப்படத்தில் நடித்து விட வேண்டும் என பல நடிகர் மற்றும் நடிகைகள் ஆசைப்படுவது உண்டு. அந்தவகையில் விஜய்க்காக எழுதிய கதையை நடிகர் கரண் இடம் கூரி படத்தை முடித்த சம்பவத்தை இயக்குனர் மூர்த்தி சமீபத்தில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் நடிகர் மூர்த்தி இவர் வேறு யாரும் கிடையாது பிச்சைக்காரன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் பிச்சைக்காரனாக நடித்திருப்பார். இவர் இதற்கு முன்பு சினிமாவில் இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தார் அந்தவகையில் கரண் நடித்த கருப்புசாமி குத்தகைக்காரர் பசுபதி நடித்த வெடிகுண்டு முருகேசன் பப்பாளி ஆகிய திரைப்படங்களை இயக்கி இருந்தார் மூர்த்தி.
ஆனால் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகிய பிச்சைக்காரன் திரைப்படத்தில் பிச்சைக்காரராக நடித்து இருந்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார் அது மட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களில் காமெடி வேடத்திலும் நடித்துள்ளார் சமீபகாலமாக இவர் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார் இந்த நிலையில் தன்னுடைய திரை அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் அவர் கூறியதாவது.
நான் கடலை என்ற திரைப்படத்தை இயக்கு வதற்காக முயற்சி செய்துகொண்டிருந்தேன் அந்த திரைப்படத்தில் எந்த ஒரு சண்டைக் காட்சியும் கிடையாது இளைஞர் லவ் வுடன் கலந்த காமெடி கதை. அந்த கதையை நாம் உருவாக்கி இருந்தேன் அந்தக் கதையைக் கூற போன இடத்தில் பலரும் சண்டை காட்சிகள் இல்லை என யோசித்தார்கள் அதனால் அந்த கதையை விட்டுவிட்டு வேறு ஒரு கதையை எழுத ஆரம்பித்தேன் ஆரம்பத்தில் சிறிய கதையாக இருந்தது ஆனால் முடிக்கும் பொழுது மிகப் பெரிய கதையாக மாறியது.
ஏதாவது ஒரு மாஸ் ஹீரோவை வைத்து இந்த கதையை படமாக உருவாக்கினால் பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன் அதன்பின் இந்த கதையை விஜய் சாரிடம் கூறுவதற்காக ஆறு மாதங்கள் முயற்சி செய்தேன். இது திருப்பாச்சி திரைப்படத்திற்கு முன்பு நடந்தது இந்த கதைக்கு பரட்டை என பெயர் வைத்திருந்தேன் ஒருநாள் இயக்குனர் பாண்டிராஜ் கால் பண்ணி கடலை கதையை கரனிடம் சொல்லுங்கள் என கூறினார்..
ஒரு தயாரிப்பாளரிடம் கதையை கூறினேன் அவர் கதை நன்றாக இருக்கிறது ஆனால் புதுமுகத்தை வைத்து எடுத்துக்கொள்ளலாம். கரன் சர்க்கு ஏற்ற மாதிரி ஒரு கதை இருந்தால் கூறுங்கள் என கூறினார் கரண் சார் படத்தை ஆரம்பிக்கும் பொழுது உங்கள் கதையை புதுமுகத்தை வைத்து ஆரம்பிப்போம் என்ற உறுதிமொழியும் கொடுத்தார் அதன்பிறகு கரன் சாரை வைத்து படத்தை ஆரம்பிக்கலாம் என தனது நண்பர்களிடம் கரன் சாருக்கு ஏற்றமாதிரி கதை இருந்தால் கூறுங்கள் என கேட்டேன்.
அதன்பிறகு நாங்கள் ரூமில் பேசிக்கொண்டிருந்த பொழுது சைக்கிள் ஸ்டாண்ட் பரட்டை கதையை கரன் சாருக்கு சொல்லலாமே என பாண்டிராஜ் சொன்னார் ஆனால் நான் விஜக்காக எழுதி வைத்திருக்கும் கதை அதனால் கொஞ்சம் யோசிச்சேன் பின் என்னுடைய சூழ்நிலை என்னை நெருக்கடிக்குள் தள்ளியது அதனால் விஜய்க்காக எழுதி வைத்திருந்த கதையை அப்படியே கரண் சாரிடம் கூறினேன் அவருக்கும் கதை பிடித்து விட்டதால் கதையில் சில மாற்றங்கள் செய்து உடனே படத்தை ஆரம்பித்தோம் அந்த திரைப்படம் தான் கருப்பசாமி குத்தகைக்காரர் எனக்கூறி பேட்டியை முடித்தார்.