சிம்புவை தேடிப்போன புதிய கதை – கேட்டு மெர்சல்லான சம்பவம்.! STR – ன் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா…

simbu-
simbu-

நடிகர் சிம்பு தனது எண்ணங்களையும் நடிப்பையும் முற்றிலுமாக மாற்றிக்கொண்டு தற்போது சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முதல் படமான ஈஸ்வரன் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்த சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்தார்.

அந்த வகையில் மாநாடு திரைப்படம் பிரமாண்ட வெற்றியை ருசித்ததோடு மட்டுமல்லாமல் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த படத்தில் இருந்து இதுவரை வெளிவந்த அப்டேட் பைல்கள் அனைத்தும் வேற லெவல் இருந்ததால் படத்துக்கான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமாவில் அசோக் செல்வன், வாணி போஜன், ரித்திகா சிங் ஆகியோர் நடித்து வெளிவந்தது சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ஓ மை கடவுளே இந்த திரைப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கினார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு பக்கம் போனவர்.

தற்போது மீண்டும் தமிழ் பக்கம் திரும்பி தற்போது சிம்புக்கு சிறப்பான கதையை சொல்ல அது அவருக்கு ரொம்ப பிடித்து போய் உடனே அடுத்த படத்தில் நடிக்க அவரை புக் செய்து விட்டாராம். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.