சினிமாவில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சில திரைப்படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் மேலும் அந்த வசூல் முன்னணி நடிகரின் படங்களையே ஓவர்டேக் செய்து பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுப்பது வழக்கம் அந்த வகையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் டாக்டர்.
இந்த திரைப்படம் முதலில் ஆக்சன் திரைப்படம் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஏன் என்றால் அப்படித்தான் ட்ரெய்லர் இருந்தது அதனால் திரையரங்கில் படம் பார்த்த போது தான் தெரிகிறது இந்த திரைப்படம் ஒரு காமெடி படம் என்று. அதனால் மக்களை இது சிறப்பாக கவர்ந்திழுத்து உள்ளது ஏனென்றால் இந்த படத்தில் அனைவரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களை சிரிக்க வைத்துள்ளனர் .
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், ரெடின் கிங்ஸ்லே, யோகி பாபு, அருண் அலெக்சாண்டர், அர்ச்சனா போன்ற ஒவ்வொரு வரும் சிறந்த பங்களிப்பை கொடுத்து அசத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளதோடு வசூலிலும் தற்போது வாரி குவித்து வருகிறது.
முதல் நாளில் 6 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் தற்போதும் நல்ல வசூலை ஈட்டி கொண்டு வருகிறது .மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அரண்மனை 3 திரைப்படமும் தான் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. புதிய படங்கள் எதுவும் வராமல் இருப்பதால் சிவகார்த்தியன் டாக்டர் திரைப்படம் வசூலை அள்ளி வருகிறது.
மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்களின் வசுலையும் ஓவர்டேக் செய்து உள்ளது டாக்டர் திரைப்படம். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 72 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் கெரியரில் டாக்டர் திரைப்படம் ஒரு மைல்கல் படம் என்று கூறப்படுகிறது.