OTT தளத்தில் வெளியான முதல் நாளிலேயே புதிய சாதனை செய்த வலிமை – அசந்துப்போய் வீடியோவை வெளியிட்ட ZEE 5.!

ajith
ajith

அஜித் தமிழ் சினிமா உலகில் எப்பொழுதுமே வித்தியாசமான திரைப்படங்களில் நடிப்பது ரொம்ப பிடிக்கும் அந்த வகையில் சமீபகாலமாக  சமூக அக்கறை உள்ள திரைப்படங்களை கொடுத்து வந்த நிலையில் தற்போது ஆக்சன் திரைப்படத்தை கொடுத்துள்ளார்.

அந்த வகையில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் வலிமை திரைப்படம் முழுக்க முழுக்க பைக் ஸ்டன்ட் மற்றும் ஆக்சன் காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டன இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. அதேசமயம் பெண்களும் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

காரணம் வலிமை படத்தில் அம்மா சென்டிமென்ட் செம சூப்பராக இருந்தது குறிப்பிடதக்கது.  இந்த திரைப்படம் 4 வாரங்களில் தொட்டு சிறப்பாக ஓடி சுமார் 224 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை திரைப்படம் இப்போ OTT தளத்தில் வெளியாகி உள்ளது.

படம் வெளிவந்து மாதம் ஆனா நிலையில் வலிமை திரைப்படம் zee 5 OTT தளத்தில் நேற்றிரவு வெளியாகியது. இதில் திரைப்படத்தை ரசிகர்கள் முதல் நாள் திரையரங்கில் கோலாகலமாக கொண்டாடுவார்கள். அதேபோல OTT தளத்திலும் அஜித்தின் வலிமை படம் வேற லெவலில் ஒரு சாதனை படைத்தது. அதாவது வலிமை திரைப்படம் ஓட்டிட்டு தளத்தில் வெளியாகிய சில நிமிடங்களிலேயே 100 மில்லியன்  streaming mins கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் zee 5 ஒரு வீடியோ கிளிப்பை வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் ஓப்பனிங் என்றால் அது கிங் மேக்கர் அஜித் தான். அது சினிமாவாக இருந்தாலும் சரி OTT ஆக இருந்தாலும் சரி கெத்து காட்டுவோம் என கூறிவருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த விடியோ கிளிப்பை..