பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இவை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 5 சீசன்களில் கலந்து கொண்ட சில முக்கிய போட்டியாளர்கள் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
நிலையில் இதுவரை முதல் இரண்டு வாரங்களில் சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜாவருணி போன்ற பிரபலங்கள் வெளியேறிய நிலையில் சென்ற வாரம் டபுள் எவிக்ஷன் நடக்கப் பெற்று ஷாரிக் மற்றும் அபிநய் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான லக்ஜரி பட் ஜெட் டாஸ்க் நடைபெற்று வருகிறது.
அதில் சில அணிகள் தேவதைகளாகவும் சில அணிகள் அரக்கர்கள் ஆகவும் செயல்பட்டு வருகின்றனர். இதில் போட்டியாளர்கள் மற்றும் மக்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேறினார். வனிதா விஜயகுமார் பிக்பாஸின் அனுமதி கேட்டு நான் இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
என அழுது கேட்டதால் பிக்பாஸ் சரி உங்கள் விருப்பம் நீங்கள் வெளியேற வேண்டும் என்றால் இந்த வீட்டை விட்டு வெளியேறலாம் என கூறியுள்ளார் இதனை அடுத்து வனிதா சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சென்ற வாரம் வரை கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் சில காரணங்களால இனி நான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதில்லை.
என கூறியுள்ளதை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் தொகுத்து வழங்க வேறு பிரபலம் தேடிவந்தனர். அந்தவகையில் நடிகர் சிம்பு, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்குவது குறித்து ஒரு முக்கிய ப்ரோமோ 1 வெளியாகியுள்ளது. அதில் நடிகர் சிம்பு தான் இனி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ.