Leo Trailer: லியோ ட்ரெய்லரால் புதிய பிரச்சனை ஏற்பட்டிருக்கும் நிலையில் அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது லியோ படக் குழு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
எனவே படத்தின் ரிலீஸாக ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்து வருகின்றனர். லியோ படத்தின் போஸ்டர்கள், கிளிம்ஸ் வீடியோ, பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் போன்றவை சோசியல் மீடியாவில் கலக்கி வருகிறது. அப்படி சில தினங்களுக்கு முன்பு ட்ரெய்லர் வெளியான நிலையில் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
அப்படி இதற்கு முன்பு வெளியான போஸ்டர்களில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றதால் இதனை பார்க்கும் சிறுவர்கள் மனநிலை பாதிக்கப்படும் என சர்ச்சை எழுந்தது. இந்த சூழலில் சமீபத்தில் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில் அதில் சில ஆபாசமான வார்த்தைகள் இடம்பெற்றது.
எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் விஜய் ஏன் இப்படி செய்தார் என கேள்வி எழுப்பப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது லியோ படக் குழு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. லியோ ட்ரெய்லரில் இடம்பெற்ற ஆபாச வார்த்தையை நீக்க கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வருகின்ற 19ஆம் தேதி வெளியாகும் நிலையில் நேற்று முன்தினம் ட்ரைலர் வெளியானது நடிகர் விஜய் முன்னுதாரணமாக செயல்படாமல் ஆபாச வார்த்தையை பயன்படுத்தினால் நிஜ வாழ்க்கையில் எதிரொலிக்கும் ட்ரெய்லரை தணிக்கை செய்யாமல் யூட்யூப்பில் வெளியிட படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.