தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருவர் சிம்பு. இவர் படங்களில் நடிப்பதையும் தாண்டி பாடகராகவும், இசையமைப்பாளராகவும், இயக்குனராகவும் வெற்றி கண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஓடும் சிம்பு கடைசியாக நடித்த வெந்து தணிந்தது காடு, மாநாடு போன்ற படங்கள் வெற்றி பெற்றதைத்..
தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க ஓபிலி என் கிருஷ்ணா உடன் கூட்டணி அமைத்து “பத்து தல” படத்தில் நடித்துள்ளார். படம் நாளை கோலாகலமாக ரிலீஸ் ஆக உள்ளது. பத்து தல படம் முழுக்க முழுக்க மணல் மாஃபியா சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகியுள்ளதால் படத்தில் ஆக்ஷன், சென்டிமென்ட் பெரிய அளவில் இருக்கும் என தெரிய வருகிறது.
சிம்புவுடன் கைகோர்த்து கௌதம் கார்த்தி, கௌதம் வாசுதேவ் மேனன், சென்ராயன், ப்ரியா பவானி சங்கர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து உள்ளனர். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை பார்த்த சிம்பு படம் சூப்பராக வந்துள்ளது நிச்சயம் ரசிகர்களுக்கு பத்து தல பிடிக்கும் என கூறியதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் பத்து தல திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் முதல் நாள் இந்த திரைப்படம் பெரிய வசூலை அள்ளும் என கணக்கு போட்டது. சிம்புவின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது ஏதாவது ஒரு பிரச்சனையை சந்திப்பது வழக்கம் அதுபோல பத்து தல படத்திற்கும் தற்போது பிரச்சனை வந்துள்ளது அதாவது படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி தர மறுத்துள்ளது.
இதனால் பத்து தல படத்தின் அதிகாலை காட்சிகள் அனைத்தும் ரத்தமாகி உள்ளன அதிகாலை காட்சிகள் கிடைக்காததால் 8 மணிக்கு பத்து தல படத்தின் முதல் காட்சி திரையிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது இந்த செய்தி தற்பொழுது சிம்பு ரசிகர்களை அப்செட் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல் முதல் நாள் வசூலும் பாதிக்கப்படும்..