தமிழ் சினிமாவில் குறைவான காலகட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றி பெற்ற நிலையில் இவருக்கு சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப் பெரிய அளவில் தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் பிரின்ஸ் படுத்திருக்கு முதலீடாக போட்ட பணம் கூட கிடைக்க முடியாத அளவிற்கு தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள அயலான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அயலான் படத்தின் படப்பிடிப்பு முடிவும் தருவாயில் உள்ள நிலையில் அதிகாரபூர்வமான அறிவிப்பை விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை மண்டேலா படத்தின் இயக்குனரான மடோன் அஸ்வின் அவர்கள் இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு இன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறும் வகையில் மாவீரன் படத்திலிருந்து ஒரு போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த போஸ்டர்.