இணையத்தில் அதிரடியாக வெளியான வலிமை திரைப்படத்தின் புதிய போஸ்டர்.! மிகவும் பயங்கரமாக இருக்குதே.

valimai
valimai

பல சினிமா பிரபலங்களும் எதிர்பார்த்து வரும் திரைப்படம் தான் வலிமை தல அஜித் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது தல அஜித் நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியான பல திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விட்டதால் இந்த திரைப்படமும் அதிக வசூல் செய்யும் என எதிர்பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக ஹீமோ குரோஷி நடித்துள்ளார் மேலும் தல அஜித்தின் எதிரியாக இந்த திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது.

தல அஜித் சினிமா பயணத்தில் இந்த திரைப்படம் அவருக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் எனவும் பலரும் கூறி வருகிறார்கள்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்யா நாட்டில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்பொழுது அஜித் அங்கிருந்து பைக் ரைட் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து வலிமை திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயா பிறந்தநாள் ஸ்பெஷலாக படக்குழு ஒரு புதிய போஸ்டரை சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டுள்ளது.ஆம் இன்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு ஏற்கனவே இன்னும் ஒரு சில நாட்களுக்கு பிறகு வலிமை படத்தின் அப்டேட் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள்.

அதன்படி இன்று கார்த்திகேயாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் காட்சியின் புதிய போஸ்டரை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளது.மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.