இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டாவது பாகம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்து விட்டது. அதுமட்டுமில்லாமல் வசூலில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.
பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு ராஜமௌலி தன்னுடைய அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். அதாவது ராஜமவுலி சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு சூப்பர்ஸ்டார் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் இணைந்து RRR என்ற புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என அறிவிப்பு வெளியானது.
பாகுபலி திரைப்படம் பிரமாண்டமாக உருவானதால் தன்னுடைய அடுத்த திரைப்படத்திலும் பிரமாண்டம் இருக்கவேண்டுமென 400 கோடி பட்ஜெட் செலவு செய்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர்களை வைத்து ரத்த ரணம் ரௌத்திரம் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 13ம் தேதி 2021 ஆம் ஆண்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இந்திய சினிமாவிலேயே மிகவும் பிரமாண்டமாகவும் அதிக எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ள இந்த திரைப்படத்தில் ராம்சரன் மற்றும் ஜூனியர் என்டிஆர் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராம்சரன் பிறந்த நாளை முன்னிட்டு இந்த திரைப்படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது அதில் ராம்சரண் வில்லை கையில் ஏந்தியவாறு மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார்.