ரஜினி,கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் அந்த காலத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் குஷ்பூ இவர் அந்த காலத்தில் நடித்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் தொடர்ச்சியாக பல வரவேற்புகள் கொடுத்தார்கள். அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் மிகவும் பிரபலமாகிவிட்டது அவர் நடித்ததை விட இவரின் பெயரில் நிறைய விஷயங்கள் நடந்து வருகிறது.
மேலும் இவர் ஒரு கட்டத்தில் இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளுடன் தற்பொழுது வாழ்ந்து வருகிறார் என்னதான் இவர் திருமணம் செய்து கொண்டாலும் வெள்ளித்திரையில் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும் குறிப்பாக இவர் அரசியலில் ஈடுபட ஆரம்பித்து விட்டார் அதை தவிர சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்தார்.
பல ரசிகர்களும் இவர் எப்பொழுது மீண்டும் வெள்ளித்திரையில் நடிப்பார் என எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்களை சமீபகாலமாகவே வெளியிட்டு வருகிறார் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என்று இருந்த இவர் சமீபகாலமாக பார்ப்பதற்கு மிகவும் இளமையாக தெரிகிறார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் மட்டும் இப்போ ஓகே சொன்னால் பல திரைப்படங்களை கைப்பற்றி விடலாம் என கூறி வருகிறார்கள்.
##Monsoonblues #Hyderabad #workmode let's do #twitterblue 💙💙💙💙 pic.twitter.com/neoRtntF8H
— KhushbuSundar (@khushsundar) September 21, 2021
அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் இவர் வெளியிட்டுள்ளார் ஆம் பார்ப்பதற்கு ஊதா கலர் உடை அணிந்து மிகவும் ஸ்லிம்மாக இருக்கிறார் இதனைபார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் எங்கள என்னென்னமோ செய்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.