கடந்த சில வருடங்களாக இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் “ஹீரோ” அவதாரம் எடுக்கின்றனர் அந்த வகையில் கோமாளி படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். அடுத்ததாக லவ் டுடே என்னும் படத்தை இயக்கி, நடித்தார் இந்த படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று 100 கோடிக்கு மேல்..
வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது. இதில் அவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டதை தொடர்ந்து தற்போது ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வருக்கிறதாம். பிரதீப் ரங்கநாதனிடம் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் இரண்டு படங்கள் செய்து தருமாறு கேட்டுக் கொண்டது அதன்படி லவ் டுடே திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய போகிறது.
இதை பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கப் போகிறார் என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்துக்கு சொன்ன கதையை பிரதீப் ரங்கநாதன் சொல்லி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம்.. இந்த கதையில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க..
மறு பக்கமும் சிம்பு நடிப்பில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் “கொரோனா குமார்” இதுவரை இந்த படம் கிடப்பிலே தான் இருக்கிறது சிம்புவுக்காக வெயிட் பண்ணி வெயிட் பண்ணி பார்த்து போரடித்து போனதால் தற்பொழுது அவரை தூக்கிவிட்டு பிரதீப் ரங்கநாதன் நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறதாம்.
தொடர்ந்து பிரதிப் ரங்கநாதனுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருப்பதால் அவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு இருக்கிறது. அதனால் தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்து உள்ளாராம்.. கடைசியாக லவ் டுடே திரைப்படத்திற்காக 1.50 கோடி சம்பளம் வாங்கினாராம்.